சஜித் அணியினர் ஜெனீவா பயணம்!!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலையடைவதாக, தமது பயணத்துக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சாப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ஜெனீவாவுக்கு சென்று அங்கு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை