இன்று நாடு திரும்புகிறார் கோட்டபாய!!

  


இன்றைய தினம் இரவு  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அவர் இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு சென்றிருந்தார்.

அங்கிருந்து , ஜுலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி, ஒகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

இந்தநிலையில் மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து இன்று இரவு இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.