மூடப்படும் அபாய நிலையில் ஹோட்டல்கள்!

 


இலங்கையில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் தற்போது கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா  410 முதல் 420 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் மாவின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.