தமிதாவுக்கு சிறையில் நடந்த சித்திரவதை!!

 
நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலையில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தமிதா அபேரத்னவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (10) சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திற்குச் சென்ற போதே அவர் இதனை தன்னிடம் கூறியதாக ஹிருணிகா கூறியுள்ளார்.

தமிதா அபேரத்ன இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பெண்களுடன் இருக்கிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்." “அவளைப் பழிவாங்கவே இப்படிச் செய்திருக்கிறார்கள்.

தற்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு கழிவறைக்கு போக வேண்டியிருந்தது. கதவில் தொங்கியப்படி பல மணி நேரம் அவர் கத்தியுள்ளார். அதன் பின்னர்தான் கழிப்பறைக்குச் செல்வதற்கு அவளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

200 பெண்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது. தமிதா உணவருந்தி கூட இல்லை. ரஞ்சன் கூறிய அனைத்தும் உண்மை என அவள் கூற சொன்னாள். தற்போது அந்த அனுபவத்தை அவள் சந்தித்து வருகிறாள் என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

மேலும் நேற்று கெட்டுப்போன பருப்புடன் பாண் சாப்பிட்டுள்ளாள், இப்போது அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.