நித்தியானந்தாவின் பரிதாப நிலை!!

 


கைலாசா அதிபதி சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவை விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடப்பதாக பரப்ரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது.

பல வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார்.

அதன்ப்பின்னர் இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார்.

இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும்வதந்திகளை கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

இதையடுத்து உடல் நலக் குறைவில் இருந்து மீண்டு வந்து சத்சங்கம் நடத்தி வந்த நித்திக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற, தகவல் வெளியாகி உள்ளமை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதேவேளை நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு இந்தியாவிலும், பல நாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

அந்த சொத்துக்களை கைப்பற்ற, அவருடன் இருப்பவர்களே, ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.