வீழ்ந்தது வெங்காய உற்பத்தி!!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சிறு போகத்தில் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை 10 இலட்சம் கிலோ குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் சிறு போகத்தில் 10 தொடக்கம் 15 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் நாளாந்தம் கிடைத்ததாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.
எனினும், இந்த தடவை சுமார் 2 இலட்சம் கிலோ கிரோம் பெரிய வெங்காயம் மாத்திரமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராமிற்கு 80 தொடக்கம் 120 ரூபா வரையே கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை