விடியல் - கவிதை!!
நிறைவு பெற்ற
மனமும் இல்லை
நிலைத்திருக்கும்
வலியும் இல்லை
ஏற்றங்களும்
ஏமாற்றங்களும்
மாற்றங்களாகி
மாறுதலாகிப்போகும்.
தொடரும் பகலும் இல்லை
விடியாத இரவும் இல்லை
காயங்கள் இல்லாமல்
காலத்தை கடக்கவும் முடியாது.
காயத்தோடும் காலமெல்லாம்
வாழவும் முடியாது.
மதி செய்யும்
மந்திரத்தாலே
காயங்கள்
மாயமாகியும் போகாது.
விதியென்று
சோர்ந்து போகாமல்
எல்லாப் பிரச்சனைக்கும்
முடிவொன்று உண்டு
என்று நம்பினால்
நல் வாழ்க்கைக்கான
விடியலும் உண்டு...!
நிலைத்திருக்கும்
வலியும் இல்லை
ஏற்றங்களும்
ஏமாற்றங்களும்
மாற்றங்களாகி
மாறுதலாகிப்போகும்.
தொடரும் பகலும் இல்லை
விடியாத இரவும் இல்லை
காயங்கள் இல்லாமல்
காலத்தை கடக்கவும் முடியாது.
காயத்தோடும் காலமெல்லாம்
வாழவும் முடியாது.
மதி செய்யும்
மந்திரத்தாலே
காயங்கள்
மாயமாகியும் போகாது.
விதியென்று
சோர்ந்து போகாமல்
எல்லாப் பிரச்சனைக்கும்
முடிவொன்று உண்டு
என்று நம்பினால்
நல் வாழ்க்கைக்கான
விடியலும் உண்டு...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
கருத்துகள் இல்லை