பகிடிவதை தொடர்பில் விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!!
சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
பகிடிவதையை தடை செய்யும் சட்டத்தின் கீழ், அவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை