இலங்கையின் ஓர் இலக்கிய ஆளுமையாளர், விடைபெற்றுள்ளார்!
இலங்கையின் ஓர் இலக்கிய
ஆளுமையாளர், இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் உலகில் இருந்து விடைபெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பு மாநகரில் நீண்டகாலம் வாழ்ந்தவர்.
இலக்கியம், நாடகம், திரைப்படம், இலத்திரனியல் ஊடகங்களில் செயலாற்றியவர். அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார்.
இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.
30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
கே. எஸ். சிவகுமாரன் விடைபெற்றுவிட்டார்.
ஆழ்ந்த இரங்கல்💐
கருத்துகள் இல்லை