இலங்கை பிரதிநிதிகள் குழு அமெரிக்கா பயணம்!!

 


வாஷிங்டனில் நடைபெற்றவுள்ள உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டு நிகழ்வுகளுக்கு இலங்கை பிரதிநிதிகள் குழுவை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுவின் 2022 ஆண்டுக்கான கூட்டங்கள், அக்டோபர் 10 திங்கள் முதல் அக்டோபர் 16 ஞாயிறு வரை வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைமையகங்களில் நடைபெறவுள்ளன.

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தலைமை தாங்குவார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதிச் செயலாளர் மற்றும் பலர் அவருடன் செல்லவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் வருடாந்த கூட்டங்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பதில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.