தமிழ் இளைஞனைத் தாக்கிய முஸ்லீம் இளைஞர் குழு!!

 


வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (22-09-2022) பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு கூடி நின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது தொலைபேசியையும் பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சகோதர முஸ்லிம் இன குழுவினராலேயே தாக்குதல் நடத்தப்பட்டதுடன், படுகாயமடைந்தவர் தமிழ் இளைஞன் ஆவார்.

இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர்.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞரும், சகோதர முஸ்லிம் இன பெண் ஒருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரே இடத்தில் பணியாற்றியதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் இருந்துள்ளதாகவும், அதன் தொடர்சியாக குறித்த பெண்ணை சந்திக்கச் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற போதே தமிழ் இளைஞன் பெண்ணின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிடச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.