இந்திய நடிகருக்கு எச்சரிக்கை!!

 


இலங்கை மக்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம் நடிகர் பிளாக் பாண்டி. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சில வார‌ங்களுக்கு முன் நடிகர் பிளாக் பாண்டி இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு சென்றமை குறித்து , காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் தற்போது கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்துவருவதால் நடிகர் பிளாக் பாண்டி வேதனையில் இருப்பதாக தமிழக் தகவல்கள் கூறுகின்றன .

 சில தினங்களுக்கு முன் தமிழக‌ டிஜி.பி அலுவலகத்திலிருந்து இலங்கை செல்வதற்காகப் பாண்டிக்கு உதவிய, நெருக்கமான அந்த நண்பரை அழைத்தவர்கள், "நாடு விட்டு நாடு போய் செய்யற உதவிகளையெல்லாம் நேரடியாப் போய்ச் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, அது தேவையில்லாத சிக்கலை வரவழைக்கலாம்" என எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது.


சம்பவம் குறித்து நடிகள் பிளாக் பாண்டி கூறுகையில் ,

"'வருமான வரித்துறையிலிருந்து உங்க ட்ரஸ்டுக்குத் தரப்பட்ட 80 ஜி வருமான வரிச்சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது'ன்னு கேட்டாங்க. இது தொடர்பா வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருமான வரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம்னு இருக்கேன்.


நான் செய்யப்போனது மனிதாபிமான அடிப்படயிலான உதவி. ஆனா நாடு விட்டு நாடு உதவிகளைச் செய்யறப்ப இவ்ளோ சட்டப் பிரச்னைகள் இருக்கும்னு எனக்குத் தெரியாது" என கவலை வெளியிட்டுள்ளாராம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.