“ஜீரோ வரைவு பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஜ்ஜியம்” - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்!!

 


ஐக்கிய நாடுகள் சபையின் 'பாதிக்கப்பட்டவர்கள்' என்பதன் வரவிலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "பாதிக்கப்பட்டவர்கள்" என்பது, தனிநபர்களாகவோ அல்லது கூட்டாகவோ, உடல் அல்லது மனக் காயம், உணர்ச்சித் துன்பம், பொருளாதார இழப்பு அல்லது அவர்களின் அடிப்படை உரிமைகளில் கணிசமான குறைபாடுகள் போன்ற செயல்கள் அல்லது தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள். கிரிமினல் அதிகார துஷ்பிரயோகத்தை தடை செய்யும் சட்டங்கள் உட்பட உறுப்பு நாடுகளுக்குள் செயல்படும் குற்றவியல் சட்டங்களை மீறுகிறது. 


   இப்படி கூறுவதனால், சிறிலங்காவில் யார் பாதிக்கப்படவில்லை? மேலிருந்து கீழாக, அதாவது நிறைவேற்று ஜனாதிபதிகள் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். இங்கே, நான் பல உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும், ஆனால் சுருக்கமாக – ஜனாதிபதி, பிரதம நீதியரசர், சிவில் சமூக உறுப்பினர்கள் (மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், மதத் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பலர்) சிறிலங்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 


    “காய்சலும் தலை வலியும் அவர் அவர்களுக்கு வந்தால் தான் அதன் தாக்கம் தெரியும்!” என்பது தமிழ்ப் பழமொழி. சிறிலங்காவில், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,  கொடூரமான மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறியுள்ளதையும், மீண்டும் அவர்கள் மனித உரிமை மீறல்களிற்கு பலியாகியுள்ளதையும் நாம் கண்டுள்ளோம் அறிந்துள்ளோம். 


   


கடந்த காலங்களில் ஐ.நா. ஜெனிவாவில் சிறிலங்காவின் பிரதிநிதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் தன்னை ஒரு காலத்தில் தேடி வந்தவேளையில் தான் தலைமறைவாக வாழ்ந்ததாக கூறியதை கேட்டிருக்கிறேன். துர்திர்ஷ்டவசமாக, அதே நபர் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் இவிரக்கமின்றி ஐ.நா. மனித உரிமை சபையில் நியாயப்படுத்திய வரலாறும் உண்டு. 


 பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைப் கவனத்தில் கொள்ள சிறிலங்கா கற்றுக் கொள்ள வேண்டும். சிறிலங்காவில் ஆட்சியை  கைப்பற்றுவதற்கான தெற்கின் இளைஞர்களின் எழுச்சி, தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷையை அடைவதற்கான முப்பது வருட அகிம்சைப் போராட்டத்தின் தோல்வியை அடுத்து ஆயுதப் போராட்டமாக மாறியது. இவை இரண்டு காரணத்தினாலும் சிறிலங்கா அரச படைகளில் காட்டுமிரண்டி தனமான அணுகு முறைகளினால் பல நூற்றுகணக்கன, ஆயிரக்கணக்னவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.  இன்று சிறிலங்கா ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை யாவரும் ஆராய வேண்டும். சுருக்கமாக கூறுவதனால், சிறிலங்கா இன்று – வல்லரசுகள், பிராந்திய வல்லரசு மற்றும் அமைதியை விரும்பும் நாடுகள், குழுக்களுக்கான சர்வதேச அரங்காக மாறியுள்ளது. 


 கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரடீஸ் கூறினார், "மனிதகுலம் இரண்டு வகையான மனிதர்களால் ஆனது: அறிவாளிகள் தங்களை முட்டாள்கள் என்று அறிந்து தெரிந்துள்ளார்கள். அதேவேளை முட்டாள்கள்  தங்களை ஞானிகள் என்று கருதுகிறார்கள்". இந்த மனப்பான்மை, சுயநலம், எரிச்சல் பொறாமை பிடிவாதம; யாவும் தேசபக்தி என்ற சாக்குப்போக்கில் அரசியல்வாதிகளினால் சிறிலங்காவை இன்றைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 

இப்போது ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் சபையின் 51வது கூட்ட தொடரில் வரவிருக்கும் தீர்மானம் குறித்து சில விடயங்கள் கூற வேண்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா பற்றிய விரிவான அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து,  இப்போது மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள், சிறிலங்கா தொடர்பாக ஓர் தீர்மானம் முன்னேடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 12ம் திகதி இதனது முதல் வரைவு, ‘ஜீரோ’ வரைவு வெளியாகியுள்ளது.  தற்போதைய ‘ஜீரோ’ வரைவு, கடந்த தீர்மானத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. 


   


சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அல்லது 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு வந்ததிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பூஜ்ஜிய வரைவு எந்தவிதத்திலும் ஊக்கமளிக்கும் செய்தியை கொடுக்கவில்லை. காலி முகத்திடல் உட்பட பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி, சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தவர்களுக்கும், இந்த வரைவு எந்த நல்ல செய்தியையும் கொடுக்கவில்லை. இவ் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், ஜெனீவாவுக்குப் பயணம் செய்து, தங்களின் போராட்டத்திற்கும் கோரிக்கைகளிற்கும் ஆதரவு தேடினர்கள். 

பூஜ்ஜிய வரைவில் 23 முன்னுரை பந்திகளயும் 18 செயல்பாட்டு பந்திகளையும் கொண்டதாக காணப்படுகிறது. சிறிலங்கா தொடர்பான கோர் குறூப் எனப்படும் செயற்பாட்டு குழு – (பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, வட மாசிடோனியா, மொண்டெனேக்ரோ, மலாவி) சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கும், அவர்கள் சார்பு நாடுகளின் மற்றும்  பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு இடமளிப்பது மிகவும் கடினமான விடயம். அது யாராக இருப்பினும,; ஓர் தீர்மானத்தை உருவாக்கும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தீர்மானம் - பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, தீர்மானத்தை முன்னொழித்தவர்கள் உட்பட யாவரும் ஓர் மாறுபட்ட எதிர் தாக்கத்தை  சந்திக்க நேரிடும். 


 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையில் அமெரிக்கா அங்கம் வகிக்கும் வரையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, அல்லது கனடாவினாலோ, ஏன் சிறிலங்கா தொடர்பான ஓர் தீர்மானத்தை முன்வைக்கவில்லை என்பதை  நாம் மனதில் கொள்ள வேண்டும். 


எவ்வாறாயினும், ஐ.நா கட்டிடத்தில் சிறிலங்கா தொடர்பான கோர் குறூப் எனப்படும் செயற்பாட்டு குழுவினால், ஏற்பாடு செய்யப்பட்டு இவ் பூஜ்ஜிய வரைவு பற்றிய இரு ஆலோசனை கூட்டங்கள், கடந்த 16ம் திகதி வெள்ளிகிழமை நடைபெற்றன. இதில் தீர்மாணத்தில் சம்பந்தப்பட்ட நாடான சிறிலங்கா, வேறு பல நாடுகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு உறுப்பினர்கள் பங்குபற்றினர்.  


 சிவில் சமூக உறுப்பினர்கள் 


இவ் பூஜ்ஜிய வரைவை வலுப்படுத்த, அனைத்து சிவில் சமூக உறுப்பினர்களும் உண்மையாக உழைக்கவில்லை என்பதை இங்கு நான் சொல்ல வேண்டும். சிலர் என்ன பேசுகிறார்கள், அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். காரணம் சிறிலங்காவில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அவர்களுடன் மிக ஆழமான தொடர்புகளை கொண்டவர்கள் - அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாட்டளர்களென கடந்த 2012ம் ஆண்டு முதல், ஐ.நா.விலும் ஐரோப்பிய பாரளுமன்றத்திலும் மசவாசகா வலம் வருவதுடன், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் பணமும் வசுலிக்கின்றனர். இப்படடியான அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாட்டளர்களை, ஐ.நா. வட்டத்தில் “அரசு சார்பு அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாட்டளர்களென” அழைப்பார்கள். இவர்களை “கோங்;கோ” என்ற பெயரிலும் அழைப்பதுண்டு.   


   


“கோங்கோ”களின் சர்ச்சை என்பது ஐ.நா.வில் ஓர் முடிவில்லாத சர்ச்சை. நிற்க, கடந்த இரண்டு ஆலோசனை கூட்டங்களில்  என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்திருக்க வேண்டும். 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை, பூஜ்ஜிய வரைவு தொடர்பான முதல் ஆலோசனை கூட்டம், முக்கியமாக ’23 முன்னுரைப் பந்தி உட்பட பொதுக் கருத்துகளும் கலந்துரையாடப்பட்டது.. சிறிலங்கா தொடர்பான செயற்பாட்டு குழு சார்பாக பிரித்தானியாவின் பிரதிநிதி திரு.பாப் லாஸ்ட் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, பூஜ்ஜிய வரைவை வாசித்து, இது சிறிலங்கா தொடர்பான கடைசித் தீர்மானத்தின் அடிப்படையிலானது என்று கூறினார். மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்தும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா பிரதிநிதி தமது கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டார். 


   சிறிலங்கா பிரதிநிதி, கொழும்பிருந்து வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பெறப்பட்டதாக ஊகிக்கப்படும்  அறிக்கை ஒன்றை வாசித்தார். பூஜ்ஜிய வரைவை சிறிலங்கா நிராகரிப்பதாகவும், சகல அங்கத்துவ நாடுகளும் ஒருமித்து கொண்டுவரும் தீர்மானம் தவிர்ந்  வேறு எந்த தீர்மானத்தையும் சிறிலங்கா ஏற்காது என்றும் தெரிவித்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது! ஏனெனில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் (30-1) ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதனை தொடர்ந்து 2017, 2019ல் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும்,  சிறிலங்கா அறவே நடைமுறைப்படுத்தவில்லை என்பதை உலகறியும். 


   


மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர்களின் அறிக்கை அவரது செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும், கடந்த காலத்தில் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதிநிதியினால் கூறப்பட்டது. ஆம், இது உண்மைதான்,  ஆனால் அவர்கள் சிறிலங்காக்கு விஜயம் செய்த பின்னர் வெளியிட்ட அறிக்கைகள் எங்கே? சிறிலங்கா அவ் அறிக்ககைக்கு என்ன செய்தார்கள்? என்ற வினாவிகளிற்கு இவர்களிடம் பதில் அறவே கிடையாது. இந்த தீர்மானத்தை நிராகரிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் சிறிலங்கா பிரதிநிதி கூறினார்.  


 ஐ.நா. தீர்மானம் தவிர்ந்து, சிறிலங்காவில் நீதியைப் பெறுவதற்கு வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் யாரிடமும் கிடையாது.  எவ்வாறாயினும், சிறிலங்கா பிரதிநிதியின் உரை, பொதுவாக தீர்மானம் ஒன்றை எதிர்கொள்ளும் நாட்டினால் கூறப்படுபவை என்பதை ஐ.நா.வில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். 


 சிறிலங்கா பிரதிநிதியை தொடர்ந்து, பல நாடுகள் பூஜ்ஜிய வரைவு பற்றி பொதுவாகப் பேசினhர்கள். சிலர் தீர்மானத்தை ஆதரித்தனர்,  சிலர் எதிர்த்தனர். தீர்மானத்திற்கு எதிராக சில நாடுகள் இருந்தன. அதில் சீனா, கியூபா, பாகிஸ்தான், ரஷ்யா, வெனிசுலா ஆகிய நாடுகள் மட்டுமே ஐநா மனித உரிமை சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். இதேவேளை, தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் பெரும்பாலும் சபையில் உறுப்பினர்களாக உள்ளனர். இது இவ்  தீர்மானம் எப்படியாக முடியும் என்பதை எடுத்து காட்டுகிறது.  


 32ஆண்டுகளாக ஐ.நா. செயற்பாடு 


  காலை அமர்வு நிறைவடைவதற்கு முன்னர் சிவில் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் சிறிலங்காவிலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில்  – சட்டத்தரணி; திரு அமீர் பாயிஸ், பாரளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.ஏ சுமந்திரன், சந்தியா எலனியாகொட, காணாமல் போன ஊடகவியலாளர் (2009) பிரகீத் எலனியாகொடவின் மனைவி, மற்றும் பவானி பொன்சேகா, ஆய்வாளர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் உரையாற்றினார்கள். 


சாந்திய எலனியாகொடவின் உரை சிங்களத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக ஐநா மனித உரிமைகள் சபையில் கலந்து கொண்டு வருவதாகவும், காணாமல் போன தனது கணவருக்கு நீதி கிடைக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஐநா மனித உரிமைகள் சபையில் தான் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வினாவினார். மேலும், சிறிலங்காவில் நிலைமைக்கு சர்வதேச பொறிமுறையே சரியான தீர்வாகும் என்றும் அவர் கூறினார். 


சாந்தியா எலனியாகொட ஐ.நா மனித உரிமை சபைக்கு கடந்த பத்து வருடங்களாக வந்து போவது  பற்றி பேசும்போது, நான் ஐ.நா மனித உரிமை பிரிவினதும் சகல செயற்பாடுகளிலும் கடந்த முப்பத்திரண்டு (32) ஆண்டுகளாக பங்கு பற்றுவது பற்றி நினைவு படுத்தி  கொண்டேன்.  கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக – ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு, உப-ஆணைக்குழு,  உடன்படிக்கை குழு, காணமல் போனோருக்கான பிரிவு,  ஐ.நா மனித உரிமை மாநாடுகள்,  கருத்தரங்குகள் போன்றவற்றில் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக பங்கு பற்றி - அறிக்கைகள், அவசர வேண்டுகோள்கள் போன்றவற்றை பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் சார்பாக முன்னேடுத்து வருகிறோம். என்பதனை சிறிலங்கா அரசின் ஆணி வேரில் நின்று பேய்காட்டு வேலைசெய்பவர்கள் தவிர்ந்த மற்றவர்களிற்கு ஆதாரங்களுடன் நன்கு தெரியும். 


 


இன்றுவரை சிறிலங்காவினால் நீதி கிடைக்காத போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றோ ஒரு நாள் நீதி  கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது செயற்பாடுகளை தொடருகிறோம். எனது தீவிர அயராத மனித உரிமை செயற்பாட்டின் காரணமாக, கிடைத்த பலன் இராண்டு. ஓன்று சிறிலங்கா அரசின் துண்புறுத்தல், கண்காணிப்பு, மிரட்டல்களிற்கு ஆளானதுடன், 2012 க்கு பின்னர் சிறிலங்கா அரசு சார்பாக ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தரும் சிலர், எரிச்சல் பொறமைக்கு மேலாக என்னை ஐ.நா.விலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தமது வேலை திட்டங்களை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் என்னை பற்றி செய்யும் பரப்புரை என்பது மிகவும் கீழ் தரமானது. காரணம், சிறிலங்கா அரசு ஐ.நா.விலிருந்து என்னை அப்புறப்படுத்தும் வேலை திட்டத்தை இவர்களுக்கு 2012ம் ஆண்டு முதல் கொடுத்துள்ளார்கள் என்பதே உண்மை. இவர்களிற்கு எனது வாழ்த்துக்கள். “காகம் திட்டி மாடு சகாது”. 


 


சாந்தியா எலனியாகொடவை தொடர்ந்து, பவானி பொன்சேகா பேசுகையில், யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த பின்னரும் நம்பகமான நீதி சிறிலங்காவில் இன்றுவரை இல்லை, அரசியல் தீர்வு இல்லை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு இல்லை, தண்டனையில்லா நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றன என்பதை நினைவுபடுத்தினார். அவர்களின் உரையை தொடர்ந்து காலை அமர்வு முடிவடைந்தது. 


   


அமர்வு மதியம் கூடியதும்,  1 முதல் 18 வரை செயல்பாட்டு பத்திகள் பற்றிய காந்தரையாடல் ஆரம்பமாகியது.  ஆரம்பத்தில், தீர்மானத்தை நிராகரித்த சிறிலங்காப் பிரதிநிதி, ஒவ்வொரு பந்திக்கும் கருத்து சொல்ல ஆரம்பித்தார். சிறிலங்காவிற்கு முக்கிய ஆதரவான நாடுகளான சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் வெனிசுலாவும் ஒவ்வொரு பந்தியிலும் தங்கள் கருத்துக்களை கூறியிருந்தனர்.  சிறிலங்கா உட்பட சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால், இவ் தீர்மானத்தை முற்று முழுதாக நீக்குங்கள் என்றே பொருள்படும்.  


   


ஐ.நா.வில் உள்ள வழக்கமான முறை என்னவென்றால், சம்பந்தப்பட்ட நாடுகள் தீர்மானத்துடன் உடன்படவில்லையானலும், அவர்கள் தீர்மானம் பற்றிய விவாதத்தில் பங்களிப்பது வழமை.  


 


ரஷ்யா மற்றும் சீனா 


   


இவ் கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கருத்துக்க மிகவும் நகைச்சுவையானவை. ரஷ்யா உரையாற்றுகையில்,  “இவ் தீர்மானம் மற்றைய நாகளின்  விவகாரங்களில் தலையிடுகிறது” என்று கூறியது மிகவும் ஆச்சரியம் தரும் செயல்;. காரணம் ரஷ்யா உக்ரைனில் என்ன செய்கிறார்கள்  என்பதை ரஷ்யா மறந்துவிட்டதா?. மேலும், சீனா கூறியது மிகவும் சிரிப்பிற்குரியது. சிறிலங்காவில் நிலவும் தற்போதைய பிரச்சினைக்கு சீனாவும் ஒரு முக்கிய காரணி -  அம்பாந்தோட்டை, கொழும்பு நகர் ஆகியவை;  என்பதை மறந்த சீனாவின் பிரதிநிதி , “எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிட வேண்டாம்” என்று இக் கூட்டத்தில் கூறியது வியற்பிற்குரியது. 


   


51வது அமர்வின் முதல் வாரத்தில், ஐ.நா.விற்கு வெளியே ஒர் அரச சார்பற்ற நிறுவனத்தின் கூட்டம் சிறிலங்கா பற்றி நடைபெற்றது. அது பயங்கரவாத தடைச்சட்டம் பற்றியது. இவ் கூட்டத்தில். முன்னாள் நீதி அமைச்சரும்,  ஐ.நா ஜெனிவா சிறிலங்கா பிரதிநிதியாக முன்பு கடமையாற்றி இருவர் பேச்சாளர்கள், முன்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நியாயப்படுத்தி மக்களிற்கு அழிவுகளை ஏற்படுத்தியவர்கள், இப்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இடர்பhடுகள் மற்றும் ஆபத்து குறித்துப் பேசுகின்றனர். இதை தான் சந்தர்பவாதம் என்பார்கள். இவர்களிற்கு வெட்கம் ரோசம் கிடையாதா?. 


 


சிறிலங்கா அரசியலமைப்பின் பிரகாரம், நாட்டை ஆட்சி செய்திருந்தால், ஐ.நா.வினால் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றுபட்டிருக்க முடியாது. தவறுகளை இழைத்த பின்னர், ஐ.நா.வின் தீர்மானங்கள், அரசியலமைப்பிற்கு எதிரானது என்று இப்போது கூறுவது மிகவும் மிலேச்ச தனமானது. சிறிலங்கா தமது அரசியலமைப்பில் உள்ள பல முக்கிய விடங்களை பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தhது காலம் கடத்துகிறார்கள் என்பதே உண்மை. 


   


அவர்கள் வெளியுலக ஈடுபாடு பற்றிப் பேசும்போது, சகலதும் தமது அரசியலமைப்புக்கு எதிரானது என்பது கூறுவது வழமை. அப்படியானால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பி.என். தலைமையிலான சர்வதேச சுதந்திரக் குழுவின் நியமனம் எப்படி ஏற்கப்பட்டது?  


 


வெளிநாட்டு நீதிபதிகளைப் பொறுத்தவரை, 1963ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அவரது கணவர் பண்டாரநாயக்கவின் படுகொலையின் அரசியல் அம்சங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, மூன்று நீதிபதிகளில் இருவர் வெளிநாட்டினர். அவர்கள் எகிப்தை சேர்ந்த நீதிபதி அப்தெல் யூனிஸ் மற்றும் நீதிபதி ஜி.சி. கானாவிலிருந்து மில்ஸ்-ஒடிச். 


   


இதே வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான புத்தரகித தேரர் மற்றும் எச்.பி. ஜெயவர்த்தனே, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பினியாஸ் குவாஸ் என்ற வழக்கறிஞரினால், உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டது. இவை சிறிலங்காவில் காலவரையறை அரசியலமைப்புக்கு எதிரானவை அல்லவா? பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை எப்போதும் கண்மூடித்தனமாக நிராகரிப்பதை தவிர்த்து - கண்ணியமாக, பண்பாடாக நீதியை நோக்கி நகருங்கள். 


சந்தர்பவாதம் 


 


51வது அமர்வின் முதல் வாரத்தில், ஐ.நா.விற்கு வெளியே ஒர் அரச சார்பற்ற நிறுவனத்தின் கூட்டம் சிறிலங்கா பற்றி நடைபெற்றது. அது பயங்கரவாத தடைச்சட்டம் பற்றியது. இவ் கூட்டத்தில். முன்னாள் நீதி அமைச்சரும்,  ஐ.நா ஜெனிவா சிறிலங்கா பிரதிநிதியாக முன்பு கடமையாற்றி இருவர் பேச்சாளர்கள். முன்பு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நியாயப்படுத்தி மக்களிற்கு அழிவுகளை ஏற்படுத்தியவர்கள், இப்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இடர்பhடுகள் மற்றும் ஆபத்து குறித்துப் பேசுகின்றனர். இதை தான் சந்தர்பவாதம் என்பார்கள். இவர்களிற்கு வெட்கம் ரோசம் கிடையாதா?. 


 


சிறிலங்கா அரசியலமைப்பின் பிரகாரம், நாட்டை ஆட்சி செய்திருந்தால், ஐ.நா.வினால் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றுபட்டிருக்க முடியாது. தவறுகளை இழைத்த பின்னர், ஐ.நா.வின் தீர்மானங்கள், அரசியலமைப்பிற்கு எதிரானது என்று இப்போது கூறுவது மிகவும் மிலேச்ச தனமானது. சிறிலங்கா தமது அரசியலமைப்பில் உள்ள பல முக்கிய விடங்களை பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தhது காலம் கடத்துகிறார்கள் என்பதே உண்மை. 


   


அவர்கள் வெளியுலக ஈடுபாடு பற்றிப் பேசும்போது, சகலதும் தமது அரசியலமைப்புக்கு எதிரானது என்பது கூறுவது வழமை. அப்படியானால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பி.என். தலைமையிலான சர்வதேச சுதந்திரக் குழுவின் நியமனம் எப்படி ஏற்கப்பட்டது?  


 


வெளிநாட்டு நீதிபதிகளைப் பொறுத்தவரை, 1963ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அவரது கணவர் பண்டாரநாயக்கவின் படுகொலையின் அரசியல் அம்சங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, மூன்று நீதிபதிகளில் இருவர் வெளிநாட்டினர். அவர்கள் எகிப்தை சேர்ந்த நீதிபதி அப்தெல் யூனிஸ் மற்றும் நீதிபதி ஜி.சி. கானாவிலிருந்து மில்ஸ்-ஒடிச். 


   


இதே வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான புத்தரகித தேரர் மற்றும் எச்.பி. ஜெயவர்த்தனே, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பினியாஸ் குவாஸ் என்ற வழக்கறிஞரினால், உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டது. இவை சிறிலங்காவில் காலவரையறை அரசியலமைப்புக்கு எதிரானவை அல்லவா? பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை எப்போதும் கண்மூடித்தனமாக நிராகரிப்பதை தவிர்த்து - கண்ணியமாக, பண்பாடாக நீதியை நோக்கி நகருங்கள்.. 


 


கடந்த பல வருடங்களாக சிறிலங்கா எந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கு மேலாக, இனிவரும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், சிறிலங்கா தொடர்பான கோர் குறூப் எனப்படும் செயற்பாட்டு குழுவினால், சிறிலங்காவிற்கு இரண்டு (2) வருட கால அவகாசம் வழங்கப்படுவதை கண்டு பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். தீர்மாளத்தில் பத்தி (PP18) பின்வருமாறு கூறுகிறது: 


 


 “இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம், மற்றும் வாய்வழி புதுப்பிப்புகளை முன்வைப்பது உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கோருகிறது. மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது கூட்ட தொடரிலும்


--

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.