மயிரிழையில் உயிர் தப்பிய மாணவன்!!
எல்பிட்டிய நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எல்பிட்டிய டிப்போவுக்கு அருகில் வேகமாகப் பயணித்த குறித்த பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த வேளை மாணவர் திடீரெனத் தவறித் தரையில் விழுந்துள்ளார்.
விபத்தில் குறித்த மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை