இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

 நமுனுகுல பகுதியில் தென்னை மரமொன்றில் ஏறி தந்தையொருவர் பறித்த தேங்காய், அவரது மகனது தலையில் விழுந்தமையால் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவத்தில் நமுனுகல - மியனகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Father Picked Coconut Son Die Namunukula Incident


அதாவது, நேற்று முன்தினம் (29-08-2022) மாலை 6.30 மணியளவில் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தந்தை தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த போது, வீட்டிலிருந்து வெளியே வந்த மகனின் தலை மீது தேங்காய் விழுந்துள்ளது.


இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Father Picked Coconut Son Die Namunukula Incident


இதனையடுத்து பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (31-08-2022) அதிகாலை மகன் உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, இந்த மரணத்துக்கு காரணமான 55 வயது தந்தைக்கு எதிராக, கவனயீனமாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.