ஒற்றைச் சிறகு - கவிதை!!

 
உயர்மட்டப் பார்வையிலேயே ... 

உலகினையே கண்டிருக்கும் ...!

பிரபஞ்சத்தின் பேராற்றலை ... 

பெரிதெனவே உணர்ந்திருக்கும் ...!!

பெருவெளிதனிலே ...

பலமுறை பயணித்திருக்கும் ...!

பிரளயங்கள் பலவற்றைச் சிலநேரம் ...

பார்த்திருக்கும் ...!!

பனித்துளிதனிலே ...

நிறையவே நனைந்திருக்கும் ..!!

கூடமைந்த கிளையின் வாசம் ...

கூடுதலாக நுகர்ந்திருக்கும் ....!

காற்றோடே காதல்கொண்டு காலமெல்லாம் நகர்ந்திருக்கும் ...!!

கூடல்பொழுதில்  தேகம் கண்ட தூயசுகமும் ...

தேய்திடாமல் தாங்கியிருக்கும் ...!!

காற்றுக்கு காதுகேட்டதோ 

இல்லை அந்த ...

உதிர்ந்துபோன  ஒற்றைச்

சிற் #இறகிற்குள் ...

உயிர் இன்னும் ஒட்டியிருக்கிறதோ ....!

அழைத்ததுமே ...

அழகாய் செவிமடுத்து

அருகினில் வந்ததே ...!!!சார்லஸ் விக்டர்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.