இருப்பிடம் குறித்த அரசாங்கத்தின் புதிய திட்டம்!!

  


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளன.


இந்த வீடுகளை அரசியல் தொடர்புகள் அல்லது சிபாரிசுகள் பேரில் வழங்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் 

முன்னுரிமை மற்றும் சரியான தேவையின் அடிப்படையில் மாத்திரம் இந்த வீடுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பொறிமுறையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.