பிரபல கிரிக்கெட் அணியின் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானர்!

 


நேபாள கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே அந்த அணிக்காக 30 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடி, முறையே 69 மற்றும் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்த நிலையில், 17 வயதான ஒரு சிறுமி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி சந்தீப் லாமிச்சானே மீது காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், காத்மாண்டு மற்றும் பக்தபூரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு லாமிச்சானே தன்னை அழைத்துச் சென்றார். பின்னர் காத்மாண்டு, சினமங்கலில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சந்தீப் லாமிச்சானே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அன்பான என் நலம் விரும்பிகளே, நான் நிரபராதி. நான் எந்த தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு சதி. என் மீது சுமத்தப்பட்ட அனைத்து தவறான குற்றச்சாட்டுகளும் காலப்போக்கில் வெளிவரும் என்று சந்தீப் லாமிச்சானே தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.