முகமாலையில் கோரவிபத்து - பலர் காயம்!!

 


A9 நெடுஞ்சாலையின் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனமும் கன்னிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

காயமடைந்தவர்கள் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.