சிறுவர் மற்றும் முதியோர் தினம்!!

 


ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர்  1 ஆம் திகதி முதியோர் நாளாக கொண்டாடப்படுகிறது.   1982 ஆம் ஆண்டு உலக அரங்கில் முதல் முறையாக 'முதியோர் நலன்' குறித்து பேசப்பட்டது. அதை ஏற்றுகொண்ட ஐ.நா. அவை முதியோர் நலனை வலியுறுத்தும்  விதமாக, 14 , டிசம்பர் , 1990 அன்று அக்டோபர் 1 ஆம் திகதியை சர்வதேச முதியோர் நாளாக அறிவித்தது.


பெற்றர்களைப் பெரியர்களைக் கனப்படுத்தும் இந்த நாள் உண்மையில் மிக உன்னதமான ஒரு தினமாகும். இந்த நாள் ஆத்மார்த்தமானது, ஏனெனில், தாய்-தந்தை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து இந்த சமூகத்தில் ஒருவராக அடையாளப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் பல சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். தங்களுக்குக் கிடைக்காத சந்தர்ப்பங்கள், மகிழ்ச்சியான தருணங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் ஆசைகளைத் தியாகம் செய்தோர் ஏராளம். 


'கடந்த காலமோ திரும்புவதில்லை; நிகழ்காலமோ விரும்புவதில்லை; எதிர்காலமோ அரும்புவதில்லை' என்ற கவிஞர் வாலியின் வரிகள் மிக அற்புதமானது. இன்று எமது முதியோரின் நிலைமை அப்படித்தான் உள்ளது. முதியோர் எங்கள் முதுசங்கள், அவர்களைப் பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும். 


ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வன்முறைகளில் சிறுவர்களைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.


தற்போது போதைஸ்துப் பானையால் அனேக சிறுவர்கள் பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக , இலங்கையின் வடபகுதியை இலக்காகக்கொண்டு காய் நகர்த்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவிர அதிகளிவிலான தொலைபேசிப் பாவனையாலும் சிறுர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்துள்ளார். 


இது சாதாரண விடயமல்ல, அவசரமாக அவசியமான பெற்றோரும் நலன் விரும்பிகளும் கவனத்தில் எடுக்கவேண்டியது விடயமாகும். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.