மருத்துவர்களுக்குப் பகிரங்கத் தடை!!

 


மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூற்றின்படி அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடு 80% என்ற நிலையில் உள்ளது.


இந்த புள்ளிவிபரங்கள் தவறானது என யாராவது கூறினால் அவர்களுடன் விவாதத்திற்கு தயார் என அதன் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டை மாத்திரமன்றி கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களும் தற்போது போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள அரசாங்கம் பயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.