மாணவிக்கு ஜீ.வி. பிரகாஷ் செய்த உதவி!

 



அண்மையில் 'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார்.


இந்நிலையில், இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

அந்த புகைப்படத்திற்கான கமெண்டில் மாணவி ஒருவர் "நான் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வருகிறேன்.

இந்த மாதம் என்னுடைய தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுக் கட்டணம் தொடர்பான விவரங்களை அனுப்பியிருக்கிறேன் முடிந்தால் உதவி செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இந்த கமெண்டை படித்த ஜிவி பிரகாஷ் 'பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது" என்று பதிலளித்துள்ளார்.
இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் ஜி.வி. பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.