சமூக சீர்கேடுகளால் சீரழியும் இளவயதினர்!!

 யாழில் திருமணமான பெண் ஒருவர் , பதின்ம வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கலாச்சாரத்திற்கு பண்பாண்டிற்கும் பெயர் போன யாழ்ப்பாணாத்தில் சமூகப்பிறழ்வான இவ்வாறான நடத்தைகள் இடம்பெறுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் இவ்வாறான பொருட்கள் இருப்பதுகூட தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று வெகு சர்வசாதாரணாக சந்துபொந்துகளிலும் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளமை நம் வளரும் இளம் சமூதாயத்தின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.


அதேசமயம் தீபாவளி தினத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை உலுக்கியிருந்த நிலையில், அவர்களின் மரணத்திற்கு காரணம் போதைப்பொருள் என மருத்துவ அறிக்கை வெளியாகி இருந்தமை பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் முதல் இளம் பெண்கள், இளைஞர்கள் வரை அடிமையாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


கல்விமான்கள் பலரை உருவாக்கி இந்த தேசத்திற்கு பெரும் எடுத்துக்காட்டாக  இருந்த யாழ்ப்பாணம் , இன்று இவ்வாறானதொரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு யார் காரணம்? கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் நம் பிள்ளைகளை விட்டு விலக்கிக்கொண்டிருக்கின்றன.


இது ஒரு திட்டமிட்ட அழிப்பா அல்லது பிள்ளைகளை சரியாக வளர்க்க தெரியாதா பெற்றோர்களா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துபார்க்கவேண்டும்.


தமிழர்கள் என்ற பெருமைக்கே களங்கம் ஏற்படுத்துவதுபோல இன்றைய யாழ்ப்பாணத்தின் இந்த அவல நிலைகுறித்து சிந்திப்போமானால் நாளைய விடியல் நல்லதாக பிறக்கும்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.