பஞ்சம் தீர பச்சைக் கற்பூரத்தில் விளக்கேற்றுங்கள்!!

 


புரட்டாசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய பெருமாள் வழிபாடு நமக்கு மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினருக்கு கூட செல்வ வளத்தை கொடுக்கும். அந்தவகையில இன்று 

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது சனிக்கிழமை ஆகும்.

இந்த மூன்றாவது சனிக்கிழமையில், இந்த நீரை வைத்தால் நம் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழும் என சொல்லப்படுகின்றது.

அதாவது பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம் என்றால் அது பச்சை கற்பூரம், துளசி. இது நாம் எல்லோருக்கும் தெரிந்தது. இந்த பச்சை கற்பூரத்தின் வாசம் நாளை உங்கள் வீடு முழுவதும் வீச வேண்டும்.

பச்சை கற்பூரத்தை நுணுக்கி விளக்கேற்றும் எண்ணெயில் போடுங்கள். நீங்கள் போடும் சாம்பிராணி தூபத்தில் சிறிது பச்சை கற்பூரத்தை போடுங்கள். நாளை பெருமாளுக்காக செய்யக்கூடிய சர்க்கரை பொங்கல் நிவேதனத்தில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை சேர்த்து செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் பெருமாளின் திரு உருவப்படத்தில் பெருமாளின் நெற்றியில் சிறிதளவு பச்சை கற்பூரம், கைகளில் சிறிதளவு பச்சை கற்பூரம், பாதங்களில் சிறிதாக பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள்.

அப்படி இல்லை என்றால் பெருமாளுக்கு வைக்கக்கூடிய மஞ்சள் குங்குமத்தில் இந்த பச்சை கற்பூர பொடியை கலந்து விடலாம். அடுத்தது பெருமாளுக்கு உகந்த விஷயம் என்றால் மாவிளக்கு.பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட்டு, அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட வேண்டும். கூடவே பச்சைக் கற்பூரம் சேர்த்த சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து விடுங்கள்.

பஞ்சபாத்திரத்தில் தண்ணீர்

பஞ்சபாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் 1 ரூபாய் நாணயத்தை போட்டு, சிறிது பச்சை கற்பூரம் துளசி இலை மஞ்சள் தூள் கலந்து பெருமாளுக்கு தீர்த்தமாக வையுங்கள்.இறுதியாக உங்களுக்கு தெரிந்த பெருமாளின் மந்திரத்தை சொல்லி, இருக்கக் கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நாளைய தினம் இரவு முழுவதும் இந்த தீர்த்தம் பெருமாளின் பாதங்களில் இருக்கட்டும். மற்றபடி மாவிளக்கு சர்க்கரை பொங்கல் எல்லாம் நீங்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்


மறுநாள் காலை எழுந்து பெருமாளுக்கு மீண்டும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பெருமாளையும் மகாலட்சுமியும் மனதார பிரார்த்தனை செய்து அந்த தீர்த்தத்திற்கு உள்ளே போட்டிருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, எங்கள் குடும்பத்திற்கு இனி பண கஷ்டமே வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இருக்கின்ற பணகஷ்டமும் படிப்படியாக குறையும். கடன் சுமையும் படிப்படியாக குறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் குடும்பமே செல்வ செழிப்போடு வாழ இந்த சின்ன பரிகாரம் வழிவகுக்கும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.