நாமல் மீது தயாசிறி குற்றச்சாட்டு!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியுள்ளதை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியபோதே தயாசிறி ஜயசேகர நாமல் குறித்து கேள்வி எழுப்பினார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைத் தவிர மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கியிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.