500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது!

 


சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த அரிசித் தொகை இலங்கையின் ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், எதிர்வரும் வாரம் மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.