அதிரடியாக களம் இறங்கும் இராணுவம்!!

 


சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் நாடெங்கும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால்,  கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா உட்பட சுமார் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான  கஞ்சா, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, சிகரெட், கசிப்பு, கோடா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


 31 சந்தேக நபர்களை கைது செய்த இராணுவத்தினர், பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். 
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.