பண மோசடிசெய்த பெண்ணுக்கு விளக்கமறியல்!!

 


மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர்.


கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த குறித்த சந்தேக நபர், பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


அத்துடன், 60,000 அமெரிக்க டொலர், 100,000 அவுஸ்திரேலிய டொலர் மற்றும் தங்க



நகைகளையும் மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று (06) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


வெளி நாடுகளில் பண வைப்பு மற்றும் வேறு தொழில்களில் பணத்தை வைப்பிலிடுவதற்கு இலாபகரமான பணத்தை வழங்குவதாக கூறி கொழும்பில் ஒரு நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.


அவரது நிறுவனத்தில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் வைப்புகளை செய்திருப்பது தற்போதைய காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


எனினும்,  வைப்பு செய்யப்பட்ட பணத்திற்கான வட்டியை செலுத்தாததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.