மு / முறுகண்டியில் "புனித பவுல் " முன்பள்ளி கல்விக்கூடம் திறந்து வைப்பு!!

 


 மு/ முறிகண்டி   - இந்துபுரம் பகுதியில் முன்பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அமரத்துவமடைந்த அமரர் திரு.சொக்கலிங்கம்-தயாளன்(தயா) அவர்களின் நினைவாக அவருடைய நண்பர்களின் நிதிபங்களிப்பில் "ஏர் நிலம்" ஊடாக 3,85,000/= நிதியில் கல்விக்கூடம் ஒன்று  அமைக்கப்பட்டு  சமூகமட்ட நலன்விரும்பிகள்,மற்றும் கிராம மக்கள்,மாணவர்கள் சகிதம் (30.09.2022)  "புனித பவுல் " முன்பள்ளி கல்விக்கூடம் திறந்து வைக்கப்பட்டது…..இந்த  நிகழ்வு கவிஞர் முறிகண்டி லக்சிதரன் தலைமையில் இடம்பெற்றது…. விருந்தினர் வரவேற்புடன் பெயர்பலகை திரைநீக்கம் செய்து அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் வரவேற்பு நடனம், சிறுவர் பாடல்கள் மற்றும் விருந்தினர்கள் உரைகளும் இடம் பெற்றன.  தொடர்ந்து அனைவருக்குமான மதிய உணவுடன்  நிகழ்வு இனிதே நிறைவேறியது….
மேற்படி நிதியுதவியினை

திரு.வீரகத்தி-சிவராசா,

திரு.வைரமுத்து-விஜயன்,

திரு.தர்மலிங்கம்-பத்மன்.

{சுவிட்சர்லாந்து} ஆகியோர் வழங்கியிருந்தனர்.  அப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்காக இவர்கள் அற்றிய இவ் உதவியினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.