இலங்கையில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிப்பு!!

 


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவின்மையே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என போஷாக்குக்கான விசேட செயலணியின் உறுப்பினர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.


அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக அதிக ஆபத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏற்கனவே ஒரு முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஜீ.விஜேசூரிய இங்கு தெரிவித்தார்.


ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரும், போசாக்கு விசேட செயலணியின் உறுப்பினருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.