மலையகத்தின் மூத்த இலக்கியவாதி இயற்கை எய்தினார்!!

 


இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையான இலங்கையின் மூத்த எழுத்தாளர் , நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


சந்தனசாமி ஜோசப், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.


தெளிவத்தை ஜோசப் தமிழ்நாட்டில் கும்பகோணத்தின் உயர்நிலைப் பள்ளியில் கற்றதன் பின்னர், இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.


இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.


ல் இ1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளிலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக அவர் திகழ்ந்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.