5 வயது மகன் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்ற தாயார்!

 


சிங்கப்பூரில் மகன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் அஸ்லின் அர்ஜுனா என்ற பெண்ணுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.


கணவருக்குப் பிரம்படி இல்லை

அதன் தொடர்பில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது கணவருக்குப் பிரம்படி இல்லை என நீதிமன்றம் எழுத்துபூர்வத் தீர்ப்பில் குறிப்பிட்டது. அவரது கணவர் ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மானும் (Ridzuan Mega Abdul Rahman) குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்.


இருவரும் தங்களது மகனை கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபரில் காயப்படுத்தினர். வெந்நீர் ஊற்றி மகனைக் காயப்படுத்தியபோது, அந்த ஐந்து வயதுச் சிறுவன் கீழே விழுந்தான்.


சம்பவத்தின் பின்னர் கைதாகும் பயத்தில் பெற்றோர் பல மணிநேரம் கழித்து மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.