வேலை வாய்ப்புக்காக யாழில் 19,000 இளையோர் காத்திருப்பு!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19,147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சனையானது தேசிய மட்ட வேலையில பிரச்சினைகளை பார்க்க அதிக உயர்வாக காணப்படுகின்றது,
21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலை யற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன
யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை