காணாமல் போனது கடற்படைப் படகு!!

 ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.சந்தேகத்திற்கிடமான படகுகளைச் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

 


ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் கடந்த அக்டோபர் 16ஆம் திகதி தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த நிலையில், 17ஆம் திகதி அவர்களின் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமையினால் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.


கடற்படையினர் இதுவரை கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போதிலும், இந்தக் குழுவோ அல்லது படகோ கண்டுபிடிக்கப்படவில்லை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


காணாமல் போன கடற்படையினர் தெற்கு கடற்படை கட்டளை பிரிவைச் சேர்ந்தவர்கள் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.