உணவிட்டவருக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு!!


 


மட்டக்களப்பு - தாளங்குடா பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியு்ளளது.


தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்ற நபர் மரணித்துள்ளார். இவர் காட்டிலிருந்துவந்த குரங்கு ஒன்றுக்கு தினமும் பிஸ்கட் வழங்கிவந்துள்ளார். குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கட்களை வழங்குவதுடன் அவரின் விசேட தேவையுடைய பிள்ளை அறையில் இருந்து குரங்கு அந்தப் பிள்ளையுடன் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம் இந்த நிலையில் திங்கட்கிழமை (17) இரவு சகயீனம் காரணமாக அவர் திடீரென உயிரிழந்துள்ளார்


உடலை வீட்டில் அஞ்சலிக்காக வைத்திருந்தபோது, தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதைப் பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா எனப் பரிசோதித்ததுடன், அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளைச் செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.


எவ்வாறாயினும், பின்னர் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.