பெரும் நக்ஷ்டத்தில் அரச நிறுவனங்கள்!!

 



ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை என்பன வருட இறுதியில் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி  இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தற்போது அதிகளவான நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 700 கோடி நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 79 ஆயிரத்து 900 கோடி ரூபா நஷ்டத்தையும் இலங்கை மின்சார சபை 26 ஆயிரத்து 100 கோடி ரூபா நஷ்டத்தையும் எதிர்நோக்கியுள்ளன.


இந்த நிறுவனங்களை மறுசீரமைத்து நாட்டுக்கு சுமையற்ற நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல தீவிரமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை பல ஆண்டுகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களே ஈடு செய்தனர்.


அதேசமயம் மேற்படி நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்ய எதிர்காலத்தில் மக்கள் மீது வரி சுமையை ஏற்றுவதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே நஷ்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது அல்லது மூடும் நிலையில் இருக்கும் நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


தேவையற்ற செலவுகள்

அதோடு அரசின் செலவுகளை குறைக்கவும் தேவையற்ற செலவுகளை இரத்துச் செய்யவும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


பொருளாதார நெருக்கடிக்கு துரிதமாக தீர்வு கிடைக்கக்கூடிய நேரடியான உடனடியான பதில் கிடைக்கும் முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் மாத்திரம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.