சிந்தனைக் கருத்து!!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
வலிமையானவர்களுக்கு வலியை தாங்கும் சக்தி இருக்கலாம். ஆனால் ஒரு போதும் வலிக்காமல் இருப்பதில்லை.
ஒவ்வொரு காயமும் பழகிப் போகிறதே தவிர, எந்த காயமும் மறந்து போவதில்லை.
நம் வாழ்வில் கடந்து செல்லும் அனைவரிடமிருந்து நாம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறோம்.
அவற்றில் சில பாடங்கள் வலி மிகுந்தவை. சில பாடங்கள் வலியற்றவை. ஆனால், அனைத்தும் விலைமதிப்பற்றவை.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
அன்புடன்
கம்பிகளின் மொழி பிரேம்
கருத்துகள் இல்லை