கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

 


திருகோணமலை – கப்பல்துறை கடற்கரையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கடற்கரையோரத்தில் சடலமென்று தென்படுவதாக பொலிசாருக்கு  நேற்று (26) வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் வெள்ளை மணல்,மக்லூத் பகுதியைச் சேர்ந்த எம்.பியசேன (65வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து அவர் சென்றுள்ளதாகவும் மது அருந்துபவர் எனவும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

குறித்த மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லை என உறவினர்கள் கூறியிருந்த போதிலும் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த மரணம் தொடர்பில் சீனக்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.