வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதில் பரபரப்பு!!

 


பாடசாலையின் வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு இன்று   காலை கலைந்ததில் வவுனியா - போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கலாக 30க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 22 பேர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிலர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.