தனுஷ்க குணதிலக விவகாரத்தை அடுத்து விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பான முறைப்பாடுகள் !

 


அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள Silverwater சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.