தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022- யேர்மனி

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல்11.00 மணியிலிருந்து மக்கள் வருகை ஆரம்பித்திருந்தது.கொறோனா விஷக்கிருமியின் தாக்கம் காரணமாக யேர்மனியில் கடந்த இரண்டு வருடங்களாக மாநிலரீதியாக மாவீரர் நாள் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.


இந்த வருடம் வழமைபோன்று யேர்மனியில் ஒர் இடத்தில் மக்கள் மாவீரர்களுக்காக அணிதிரண்டு தங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதோடு தமிழீழத்தின் அடையாளங்களை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு மிகப்பெரும் அரசியல் செய்தியையும் எடுத்துரைத்துள்ளார்கள்.


சிறிலங்காவில் தமிழ்மக்களை ஒத்தையாட்சி யாப்புக்குள் அடக்கி தமிழீழமக்களின் தாய் நாடாகிய தமிழீழத்தை இல்லாமல் செய்வதற்கான சதி முயற்சியை தங்கள் கைக்கூலித் தமிழர்களை வைத்து அடைவதற்காக சர்வதேசமும், சிங்கள இனவழிப்பாளர்களும் முயற்ச்சித்துவரும் வேளையில் தமிழீழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழமக்கள் தங்கள் தாயகக்குறிக்கோளில் நிமிர்ந்து நிற்கும் காட்சியை இம்முறை மாவீரர்கள் இச்சத்திகளுக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள்.


அந்த வகையில் பல இடையூறுகளுக்கும், குளப்பங்களுக்கும் செவிமடுக்காமல் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழமக்கள் டோட்முண்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாளில் அணிதிரண்டு மாவீரர்களின் பெயரால் குழப்பங்களை உருவாக்க நினைத்த சக்திகளுக்கு பதில் உரைத்திருக்கின்றார்கள்.


மண்டபத்தில் பல இடையூறுகள் இருந்தபோதிலும் வருகை தந்திருந்த மக்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டது மனதை நெகிழவைக்கும் காட்சிகளாக இருந்தது. நிகழச்சிகள் வளங்கிய எம் இளையவர்கள் இதில் பெரும்பங்கு வகித்திருந்தார்கள்;. அத்தனைபேருக்கும் தேசியத்தின் சார்பில் தலைவணங்கித் தலைநிமிர்கின்றோம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.