எங்கள் சூரியனின் பிறப்பு !

 

எங்கள் சூரியன்

காரிருள் சூழ்ந்த மாங்கனித்
தீவில்
ஒரு சூரியனின் பிறப்பு !
வேரினைக் காத்திட வேங்கை குலத்தில் மகாவீரனின் மலர்வு!
சிறுவயதில் சீரிய சிந்தனை தாங்கிய வீறு கொண்ட வீரனின்
உயிர்ப்பு!
தாய்மண்ணினை கூறு போடும்
தலைவர்கள் மத்தியில்
தூய்மையாய்
ஓடும் பெருநதியொன்றின் பிறப்பு!
நேரிய சிந்தனையில்
நெறி புரளாக் கொள்கையில்
வழி தவறாப் பயணியாய்
தமிழரின் மொழியின் விழியாய்
அழியும் மண்காக்க
சுடுகலன் சுமந்த சாமியாய்
அவதரித்த ஆனந்தநாள்!
தம்பியாய் அண்ணனாய் தலைவனாய்
தமிழ் இனத்தின் முகவரியாய்
முப்படை கட்டிய தளபதியாய்
தனியரசு அமைத்த தலைமகனாய்
தரணியே போற்றும் தமிழ் தேசியத் தலைமையாய்
நாமெல்லாம் கொண்டாடும்
ஆண்தாயின் அகவைநாள்!
நீங்கள் காட்டிய வழியில்
இனத்தின் இறமையை மீட்டிட
அறத்தோடு போராடுவதே
உங்கள் அகவைநாளுக்கு
எங்கள் அன்பு பரிசாக இருக்கும்!
அஃதே
உங்களுக்கு அதியுச்ச பரிசாகவும் பிடிக்கும்!
இன்னும்
இனம்படும் நிலைகண்டு
பொங்கும் அலையாய்
விம்மி விம்மி வெடிப்பீர்கள்!
என்ன செய்ய
நீங்கள் அருகில் இல்லையென்றவுடன்
புழுக்களும் பூச்சிகளும்
எழுந்து நிற்கிறது!
உங்கள் உயர்வு பேசிய
வாய்களும் அழுக்குகளை
புறந்தள்ளுகிறது!
ஆனாலும்
உங்களை ஆளமாக நேசிக்கும்
ஆன்மாக்கள் அத்தனையும்
சுட்டெரித்து
தங்கத்தமிழ் மண்ணை
உங்கள் வழியில் மீட்பார்கள்
அதுவரை
உலகம் தமிழர் உரிமை முழக்கத்தை
முழங்கிக்கொண்டே இருப்பார்!
✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.