மாவீரர் நாளும் லெப்.சங்கர் பற்றிய நினைவூட்டலும்!

 

இன்று மாவீரர்நாள் தமிழிழம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடி மடிந்த மானவீரர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கும் புனிதநாள். தமிழிழ விடுதலைப்போராட்டகளத்தில் சங்கர் என்ற மாவீரனை முதலாவதாக விதைத்தநாள்.



மாவீரர்கள் இறப்பதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் நீண்ட போராட்ட வரலாற்றுப் போக்கில் பெருவிருட்சங்களாக மாவீரர்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.

சங்கரின் சாவு நிகழப்போவதையும் அது புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போவதையும் அறியால் அன்றைய யாழ்பாணத்தில் காலை விடிந்தது

1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் நல்லுரில் நாவலர்வீதியும் டக்காவீதியும் சந்திக்கும் சந்தி மூலையிலுள்ள பொருளியல் விரிவுரையாளர் ச.நித்தியானந்தன் வீட்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயமடைந்த சீலன் உள்ளிட்ட நான்கு போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வெளியேறும் போது மகிழ்ச்சியின் நிமித்தம் புலிவீரர்களுக்கு விருந்துபசாரம் நிகழ்தது

போராளிகள் இருவர் இருவராக சென்று உணவருந்திவிட்டு திரும்பிவிட்டனர் இறுதியாக அன்று அவ்வீட்டிற்கு சென்ற லெப் சங்கர் வீட்டினுள்ளே உணவருந்திக்கொண்டிருந்தார் அவ்வேளை மாலை 3:30 மணியளவில் வீட்டனுள் சிங்களப்படை திடீரென தேடுதல் வேட்டைக்காக புகுந்தனர்.

உடனே சங்கர் வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று கிளுவைவேலியை வேகமாக பாய்ந்து தாண்டும்போது இராணுவத்தின் துப்பாககிறவை ஒன்று சங்கரின் அடிவயிற்றுப்பகுதியில் படுகாயப்படுத்தியது

இரத்தம் பீரிட்டுக்கொண்டிருக்க டக்காவீதியில் குதித்து ஓடிக்கொண்டிருந்த சங்கரை அவ்வீதியால் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஈரோஸ் இயக்க உறுப்பினரும் பல்கலைக்கழக மாணவருமான செல்வின் தனது மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வேகமாக திருநெல்வேலி மறைமுக முகாம்நோக்கி விரைந்தார் மாலை 4 மணிக்கு குமாரசாமி வீதி 41ம் இலக்க மறைமுகமுகாம் வீட்டில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டார்.

மாலைநேரம் போராளிகளும் ஆதரவாளர்களும் விரைவாக தொழிற்பட தொடங்கினர் மருத்துவர் கெங்காதனிடம் உதவி கோரப்பட்டது அன்றைய பதட்ட நிலையில் வைத்தியசாலைக் கொண்டுசெல்ல முடியாது ஆகையால் தனியிடத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் இசைந்ததற்கிணங்க தீவிர ஆதரவாளரும் பல்கலைக்காழக மானவருமான ஜெயரெட்டி காரில் ஏற்றிக்கொண்டு சென்று தனியிடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது

ஆனால் உள்ளக இரத்தக்கசிவுக்கு யாழ்பாணத்தில் வைத்து சிகிச்சையளிப்பது பாதுகாப்பற்றது என்பதை காரணம் காட்டி தமிழகம் கொண்டுசெல்லும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார். அன்றிரவு சங்கர் கொக்குவில் அம்பட்டப்பலத்தடியில் உள்ள ஒரு வீடடில் (ரவிசேகரின் அறையில்) சங்கர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார்

ஐந்து நாட்களாக தமிழக படகுப்பயணம் பல்வேறு தடைகளால் தமதப்பட்டு நவம்பர் 26 இரவு தமிழகம் நோக்கி பயணப்பட்டார். சங்கரை மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்ல அன்று இயக்கத்திலிருந்து விலத்தியிருந்த அன்டன் (சிவகுமார் கனடாவில்) நியமிக்கப்பட்டார்.

27ம் நாள் அதிகாலை தமிழக கரையியை அடைந்த சங்கர் மதுரையில் இயக்க ஆதரவாளாரான மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்கவைத்துவிட்டு அன்ரன் தலைவரை சந்திக்க சென்னைக்கு பயணித்தார்

அவ்வேளை மூதாட்டி வீட்டில் படுகாயத்தின் வேதனையில் முனகிக்கொண்டிருந்த சங்கர் தாகம் மேலிட தண்ணீர் கேட்க மூதாட்டி கோப்பி தயாரித்து வழங்கினார் கோப்பி அருந்தியதும் ஒவ்வாமையால் விரைவான உள்ளக இரத்தப்பெருக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்த சங்கர் தம்பி தம்பி என தலைவரை நெடுநேரம் அழைத்துக்கொண்டே கிடந்தார்.

மாலை 6:05க்கு தலைவரின் மடியில் அவர் மூச்சு நின்றுபோனது. இதை அன்று தலைவர் ஒரு குறிப்பில் சங்கர் ஓ வீரச்சாவடைந்த நேரத்தை எழுதி சங்கரின் இழப்பு என்னை ஆழமாகப் பாதித்தது என எழுதியிருந்தார்.
இதை அவருடனிருந்த பேபி சுப்பிரமணியம் தான் எப்போதும் கையில் வைத்திருக்கும் பையில் பத்திரப்படுத்தினார். அன்றிலிருந்து நவம்பர் 27 தமிழீழ விடுதலை போராட்டத்தின் குறியீட்டு நாளாய் பரிமாணமித்திருக்கிறது.

1989 முதல் நள்ளிரவு 12.01 இற்கு தீபமேற்றி அனுட்டிக்கப்பட பேபி சுப்பிரமணியம் அவர்களின் பையிலிருந்த தலைவர் எழுதிய குறிப்பு சங்கர் இறந்த நேரத்திற்கே (6.05) விளக்கேற்றும் நேரத்தை 1996 இல் இருந்து மாற்றியது

சங்கரின் அடிச்சுவட்டை பின்பற்றி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேசத்தின் புதல்வர்கள் தாயகவிடிவிற்காக தம்மை ஆகுதியாக்கி விடுதலைப் பயிருக்கு உரமாயினர்.

இம்மாவீரர்கள் தம் இளமைக்காலத்தை துறந்தவர்கள் பணம் பதவி பட்டம் புகழ் ஆசைகளை புறந்தள்ளியவர்கள் இலட்சிய வேட்கையேடு நெருப்பாற்றில் நீந்தியவர்கள் சொல்லணாத் துன்பங்களை தோளில் சுமந்து தமிழ் மக்களுக்கு ஒளியூட்டியவர்கள் எதற்கும் விலைபோகதவர்கள் அவர்கள் விலைமதிப்பற்றவர்கள் தமிழீழ மக்களும் அவர்களுக்கான விடுதலைக் கனவையும் நெஞ்சில் சுமந்து களமாடியவர்கள் அவர்கள் கனவு சுமந்து நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் உறுதிகொள்வோம்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.