யாத்திரை வந்த யுவதி பலி!

 


அனுராதபுரம் ஹிதோகம திபுல்வெவ குளத்தில் மூழ்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அநுராதபுரத்திற்கு யாத்திரையாக வந்த யுவதி உட்பட குழுவினர் நேற்று (26) பிற்பகல் திபுல்வெவ குளக்கரைக்கு அருகில் நீராடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ​​குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் யுவதியை மீட்டு நெலுபேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த யுவதி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுக்க வடரெக்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.