பனையோலைப்பெட்டியில் பிரியாணிபார்சல்; பிளாஸ்டிக்கு மாற்றாக தூத்துக்குடியில் புதுமுயற்சி!

 

நெகிழிப் பயன்பாட்டுல எனக்கு விருப்பம் இல்ல. ஆடு, மாடுகள் மேய்ச்சல்ல இரை எடுக்கும்போது சாக்லேட்கவர், பால் கவர், ஷாம்பு கவர்னு சின்னச் சின்ன நெகிழிப் பேப்பர்களை தெரியாமல் இரையுடன் சேர்த்து விழுங்கி செரிமானம் ஆகாம இறந்து போகுது. இது, கிராமப்பகுதிங்கிறதுனால இந்த மாதிரி நிறைய தடவ நடந்திருக்கு. அதே நெகிழி, எத்தனை வருஷம் ஆனாலும் மண்ணுல மட்காது. நெகிழியில மைக்ரான் குறைஞ்ச நெகிழியைப் பயன்படுத்தினாலும் நெகிழி நெகிழிதான்.


பனையோலைப் பெட்டியில் பிரியாணி பார்சல்


அதனால பிரியாணியை வாழை இலையில போட்டு மடக்கி, நியூஸ் பேப்பர் சுத்திதான் பார்சல் போட்டு ஆரம்பத்துல விற்பனை செஞ்சுகிட்டு வந்தேன். அதே நேரத்துல விளாத்திக்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல வீட்டுக்கு வீடு பெண்கள் பனை ஓலையால பெட்டி முடைவாங்க. நெகிழிப் பயன்பாட்டால பனை ஓலைப் பெட்டி பயன்பாடு குறைஞ்சு போச்சு. இப்போ, 100-க்கும் குறைவான வீடுகள்லதான் இந்தப் பெட்டி முடையுற வேலை நடக்குது.


#பிளாஸ்டிக்கால் ஏற்பட்டு வரும் தீங்குகளை விட்டு நீங்குவதற்காக #இறைச்சிக்கடைகளில் பழைய முறையான #பனைஓலையில் பொதிந்து தருகின்றனர். சிரமமான பணி என்றாலும் நமது நன்மை கருதி மெனக்கெடும் வியாபாரிகளுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

#பனையோலை #பனை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.