ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய குழந்தை நட்சத்திரம்!!

 


கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நடிகை கீர்த்தனா தற்போது உதவி ஐஏஎஸ் அதிகாரியாக வலம்வருவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.


கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற கீர்த்தனா மாநில தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சுமார் 32 படத்திலும், 48 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார்.


தற்போது கர்நாடக மாநிலத்தின் நெல் களஞ்சியமான மாண்டியா மாவட்டத்தில் இப்போது புதிய உதவி கமிஷ்னராக பொறுப்பேற்றுள்ளார்.


குழந்தையாக இருந்த போது நடிப்பில் அசத்திய இவர், வளர்ந்ததும் படிப்பில் கவனம் செலுத்தி கேஏஎஸ் என்ற தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்று, 2011ம் ஆண்டு அரசு அதிகாரியாகியுள்ளார்.


பின்னர், யுபிஎஸ்சி தேர்வை தொடர்ந்து எழுதிவந்த நிலையில் இறுதியாக 6வது முயற்சியில் 167வது இடத்தினை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார்.குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது மாவட்ட அதிகாரியாக வலம்வருவதுடன், தனது சேவையினை சிறப்பாக செய்வதற்கு செய்வதற்கு மக்களிடம் ஒத்துழைப்பையும் நாடியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.