மட்டக்களப்பு,வாகனேரி பகுதியில் 20 வெடிகுண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு பெட்டிகளிலும் இருபது 60 மில்லிமீற்றர் ரக வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அவற்றைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வாகனேரி வயல்வெளியை அண்மித்த சந்திவெளி பாலத்திற்கு அருகில் இந்த வெடிகுண்டுகள் இருந்ததாகவும், கடந்த 08 ஆம் திகதி இரவு நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்தார்கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.