இயக்கச்சி​யில் கட்டுமானப் பணியில் ஈடுப்பட்ட ஒருவர் பலி!!

 


பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி​ முகாவில்​ பகுதியில் கோயில் கட்டுமாண பணியில் இருந்த பணியாளர் ஒருவர் பலியாகிய சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது.


குறித்த சம்பவமானது பளை இயக்கச்சி முகாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


கோயில் கட்டிட வேலை ஒன்றில் கொங்கிரீட்​ போடும் வேலை இடம்பெற்று கொண்டிருந்த போது முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த மரங்கள் விழுந்தமையால் கொங்கிரீட் சரிந்து கட்டிடம் வீழ்ந்தமையால்​ பணியாளர் கட்டிட இடிபாட்டுக்குள் விழுந்துள்ளார்.


மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.