முகநூலால் வந்த சோதனை!!

 


தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் ஒருவர் 17 வயது சிறுமியின் தொலைபேசியில் உள்ள முகநூல் பாகத்தை திருடி சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸிற்க்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

அச் சிறுமி தனது தொலைபேசியை பழுது பார்ப்பதற்காக அருகில் உள்ள தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் கொடுத்துள்ளார்.

கொடுத்து சில மணித்தியாலங்களில் அத் தொலைபேசியை திரும்ப வாங்கி உள்ளார்.

அத்தோடு அச் சிறுமி கைத்தொலைபேசியை சோதித்த போது தொலைபேசியில் இருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன நீக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து மீண்டும் குறித்த நபரிடம் கூறி புதிய மின்னஞ்சல் முகவரி, முகநூல் கணக்கென்பனவற்றினை உருவாக்கியுள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பலர் சிறுமியை தொலைபேசியில் அழைத்து "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பைத்தியக்காரத்தனமான விடயங்களைச் செய்யாதீர்கள்" என்று திட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேகமுற்று சிறுமியின் முகப்புத்தக கணக்கினை சோதித்த போது காசுக்காக விற்பனை செய்பவர் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் முகப்புத்தக கணக்கினை பின் தொடர்ந்தவர்கள் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய விளம்பரத்தை அவருக்கு அனுப்பிய நிலையில், சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், தொலைபேசி பழுதுபார்க்கும் நபருக்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.