கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம் உயர்வு!!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக குளத்தினை அண்மித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக கனகாம்பிகை குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம் ஆனந்தபுரம் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், வெள்ளம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள கழிவுக்கால்வாய்களை சுத்தம் செய்து நீர் வழிந்தோட கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை